உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.ஆர்., ஆட்சியில் கட்டிய வீடுகள் இடியும் அபாயம்

எம்.ஜி.ஆர்., ஆட்சியில் கட்டிய வீடுகள் இடியும் அபாயம்

பொங்கலுார்:பொங்கலுார் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் ஒவ்வொரு குக்கிராமத்திலும், 20 முதல் 50 குடும்பங்கள் வரை உள்ளது. அவர்களுக்கு பெரும்பாலும் குடிசைகளே இருந்தன. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, குடிசைகளுக்கு பதிலாக ஓட்டு வீடுகள் கட்டித் தரப்பட்டன. பின் அடுத்து வந்த ஆட்சியில் வீடு இல்லாத பயனாளிகளுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன.அந்த வீடுகள் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளை நெருங்குகிறது. ஓட்டு வீடுகளில் உள்ள மரங்கள் உளுத்து கீழே விழும் நிலையில் உள்ளது. கான்கிரீட் வீடுகள் நாளடைவில் காரை பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. வீடுகளில் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுந்து வருகிறது. பெருமழை பெய்யும் காலங்களில் வீடுகள் அடியோடு இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. பலர் அந்த வீடுகளை கூட பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர். வறுமை காரணமாக புதிதாக வீடு கட்ட முடியாததால் பழுதடைந்த வீட்டிலேயே குடியிருந்து வருகின்றனர்.எம்.ஜி.ஆர்., ஆட்சிக்குப்பின் பல அரசுகள் மாறிய நிலையிலும், பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டி தர யாரும் முன் வரவில்லை. பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக தங்களுக்கு புதிதாக வீடு கட்டித் தர அரசு முன்வருமா என்ற ஏக்கத்துடன் பலர் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை