உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரவணைப்பு அவசியம் கண்காணிப்பும் தேவை

அரவணைப்பு அவசியம் கண்காணிப்பும் தேவை

குடும்பம், உறுப்பினர்கள், உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதை அறுத்தெறியும் போது, அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.சமீபத்தில், அவிநாசி அருகே கல்லுாரியில் பயிலும் இரு இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் 'நெருங்கிய' தோழிகள். ஒருவரை பார்க்க மற்றொருவர் வீட்டுக்கு செல்கின்றார். அன்று மாலை, இருவரும் தற்கொலை செய்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் விசாரித்தனர். அவர்கள் தன் பாலின ஈர்ப்பாளர்கள் என்பது தெரிந்தது. அவர்களது மொபைல் போன், பேஸ்புக், ட்விட்டர் போன்ற அனைத்தையும் பார்த்த போது தெரிந்தது. வாழ்க்கை பிடிக்காமல், முன்னதாக, இருவரும் பேசி வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது.போலீசார் கூறியதாவது:பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இருக்க நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், எது தவறு, சரி என்பது போன்ற அனைத்தையும் கண்காணித்து, நண்பர் போல் இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும். கண்டிப்பு இருக்கலாம்; அந்த கண்டிப்பு அளவு கடந்தும் இருக்கக்கூடாது. அதுவும் தவறுக்கு வழி வகுத்து விடும். கண்காணிப்பு இல்லாத போது, தவறான பழக்கத்துக்கு செல்ல வாய்ப்பு நேரிடும். இந்த பழக்கம், கொலை, தற்கொலையாக கூட மாற வாய்ப்பு உண்டு. இதனால், குடும்பமே பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை