ஊ ண் மிக விரும்பு
'ஊண்' என்றால் நன்றாகச் சாப்பிடு என்பதல்ல; போதுமான அளவு நற்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்பதுதான் பொருள்.உணவே மருந்து என்கிற நிலை மாறி, இன்று பலரது வாழ்வில், மருந்தே உணவாகிப்போய்விட்டது. சத்து நிறைந்த உணவுகளை சரிவிகிதத்தில் சாப்பிட தவறுவது; காலநேரம் தவறி உண்பது; ஸ்னாக்ஸ் என்கிற பெயரில் தேவையற்ற உணவுகளை உண்பது; உணவு கலப்படம் ஆகியவையே நோய்க்கு காரணமாகின்றன.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது : உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திவருகிறோம். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகளால், உடல் உபாதைகள் ஏற்படும். பொதுமக்கள் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.