உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தீர்வு வேண்டும்; மனம் குளிர வேண்டும்

 தீர்வு வேண்டும்; மனம் குளிர வேண்டும்

திருப்பூர்: பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது கிடைக்காத பி.எப். - போனஸ் அகில இந்திய தொழில் சங்க மைய கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.யு.டி.,) சார்பில், தொழிலாளர்கள் திரண்டு வந்து அளித்த மனு: கணக்கம்பாளையம் பிரிவில் செயல்பட்ட பனியன் நிறுவனத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக பணிபுரிந்துவந்தோம். கடந்த நவம்பர் மாதம் முதல், வேலை இல்லை என கூறி எங்களை வெளியேற்றிவிட்டனர். இரண்டு ஆண்டுகளாக பிடிக்கப்பட்ட பி.எப். தொகையை, முறையாக அரசுக்கு செலுத்தவில்லை. கட்டணக் கொள்ளை கூடாது நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனு: திருப்பூரில் நடத்தப்படும் பொருட்காட்சிகளில் ஆய்வு நடத்தி, கட்டண கொள்ளையை தடுக்கவேண்டும்; போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். இலவச பட்டா வேண்டும் தாராபுரம், நந்தவனம்பாளையம் ஊராட்சி, காசிலிங்கம்பாளையம் கிராமம், நாவிதன் புதுாரை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். உப்பாறு அணைக்கு நீர் தேவை தாராபுரம் தாலுகா, உப்பாறு அணைக்கு உயிர் நீர் வழங்க ேகாரி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து தலைமையில்விவசாயிகள் மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி. நான்காம் மண்டலத்துக்கான நீர் நிறுத்தப்படும் தருவாயில் உள்ளது. ஆகவே, இந்த இடைவெளியில், அரசூர் வழியாக, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கவேண்டும். நேற்றைய கூட்டத்தில், மக்களிடமிருந்து மொத்தம் 356 மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி