மேலும் செய்திகள்
உயர்மின் விளக்கு அமைக்கணும்
3 minutes ago
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
3 minutes ago
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
6 minutes ago
ரவுண்டானா தேவை
10 minutes ago
உடுமலை: உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை பரவலாக தொடர்வதால், உலர் களங்களில், கொப்பரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பகலிலும், வெயிலின் தாக்கம் இல்லாமல், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், கொப்பரை உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் மந்தநிலை தொடர்கிறது. நோய்தாக்குதலால், தேங்காய் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், தேவை அதிகரித்து, கடந்த சில மாதங்களாக, கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. இதை அடிப்படையாக கொண்டு தேங்காய் விலையும் உயர்ந்தது.தற்போது கொப்பரை வர்த்தகத்தில், நிலை இல்லாமல், நாள்தோறும் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளது. பருவமழை இடைவெளி விட்டதும், கொப்பரை உற்பத்தி சீராகும்; விலை அதிகரிக்கும். தேங்காய்க்கும் நிலையான விலை கிடைக்கும்என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
3 minutes ago
3 minutes ago
6 minutes ago
10 minutes ago