உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு; ஆடை ஏற்றுமதியாளர் வரவேற்பு

இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு; ஆடை ஏற்றுமதியாளர் வரவேற்பு

திருப்பூர்; செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை, ஓராண்டிற்கு நீட்டித்து வழங்கியதற்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல் வரவேற்றுள்ளார்.அவர் கூறியதாவது:எங்கள் வேண்டுகோளை ஏற்று, செயற்கை இழை பின்னலாடை துணிகளுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி வரி விலக்கை, மேலும் ஓராண்டிற்கு, அதாவது, 2026, மார்ச் 31 வரை நீட்டித்தமைக்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக டைரக்டர் ஜெனரல் அஜய்பாடு ஆகியோருக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.'அட்வான்ஸ் லைசன்ஸ்' மூலம் துணிகளை இறக்குமதி செய்து, அதை மறு ஏற்றுமதி செய்யும் ஏற்பாட்டுக்கான இந்த விலக்கு, மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஏற்றுமதி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவும். இதன் வாயிலாக, வரும் நிதியாண்டில், நமது ஏற்றுமதி வர்த்தகம் மேலும் விரிவடைந்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி, நம்பிக்கையுடன் பயணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை