உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகேட்பு முகாமில், 31 மனுக்களுக்கு தீர்வு

குறைகேட்பு முகாமில், 31 மனுக்களுக்கு தீர்வு

திருப்பூர்; மக்கள் குறைகேட்பு முகாமில், இரு தரப்பையும் அழைத்து போலீசார், 31 மனுக்களுக்கு சுமுக தீர்வு ஏற்படுத்தினர்.பொதுமக்கள் தரப்பில், கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கின்றனர்.இது சம்பந்தப்பட்ட சரகம், ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதில், பல மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாமல் நிலுவையில் உள்ளது. இம்மனுக்கள் தொடர்பாக, இரு தரப்பையும் அழைத்து குறைகேட்பு முகாம் மூலமாக விசாரித்து மாநகர போலீசார் தீர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.31 மனுக்களுக்கு தீர்வுஇச்சூழலில், கே.வி.ஆர்., நகர் சரகத்துக்கு உட்பட்ட சென்டரல், தெற்கு மற்றும் மகளிர் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக, இரு தரப்பிடம் விசாரணை நடத்த போலீஸ் தரப்பில் சம்மன் வழங்கி ஆஜராக அறிவுறுத்தினர்.நேற்று காலை பூ மார்க்கெட் வீதியில் உள்ள குஜராத்தி திருமண மண்டபத்தில் குறைகேட்பு முகாம் நடந்தது. கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.முகாமில், இரு தரப்பிடம் விசாரித்த போலீசார், 31 மனுக்களுக்கு சுமுக தீர்வு ஏற்படுத்தினர். ஒன்பது மனுக்கள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை