காட்டுப் பன்றிகளால் பாதிப்பு; நடவடிக்கை எடுக்க விவசாயி எதிர்பார்ப்பு
பல்லடம் : மயில்களின் தாக்குதலால் தக்காளி விளைவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதோ அதுபோல், காட்டுப்பன்றிகளால், விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:உடுமலை வட்டார மலைப்பகுதி கிராமங்களில், காட்டுப் பன்றிகள் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. வனப்பகுதிகள் வழியாக ஊடுருவிய காட்டுப் பன்றிகள், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளன. கவுசிகா நதியின் கரையோரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வசிக்கின்றன.வாழைக்கு முதல் எதிரி காட்டுப்பன்றி தான். வாழைகளை மொத்தமாக உருக்குடைய செய்யும் தன்மை கொண்டவை. இதுதவிர, பீட்ரூட், உருளை, கேரட், முட்டைக்கோஸ் உட்பட காய்கறி பயிர்களையும் கடுமையாக தாக்குகின்றன.யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் வனத்துறை, மான், மயில் மற்றும் காட்டுப்பன்றிகளால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டு கொள்வதில்லை. இது போன்ற வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்காணித்து தடுக்காமல், பாதிப்பு ஏற்பட்ட பின் இழப்பீடு வழங்குவதால் பயனில்லை. மேலும், வி.ஏ.ஓ., தாசில்தார்,வேளாண் துறை என, துறை ரீதியான அதிகாரிகளிடம் நடையாய் நடந்து இழப்பீடு கிடைப்பதற்குள், பாதிக்கப்பட்ட விவசாயி காணாமல் போய்விடுவார். எனவே, வேளாண்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியன விவசாயிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் முன், அவற்றை தடுக் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'வராஹ' அவதாரம்
மகா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம். விஷ்ணு ஒரு 'பன்றி' உருவம் கொண்டு இரண்டு தந்தங்களுடன் பிறந்தார். அரக்கனை கொன்ற பிறகு தன் தந்தங்களால் இவ்வுலகை உயர்த்தினார்.