உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணிதத்திற்கான தொடக்கம்; கல்லுாரியில் பயிலரங்கம்

கணிதத்திற்கான தொடக்கம்; கல்லுாரியில் பயிலரங்கம்

உடுமலை, ; உடுமலை ஜி.வி.ஜி.,விசாலாட்சி கல்லுாரியில் 'கணிதத்திற்கான தொடக்கம்' என்ற தலைப்பில் பயிரலங்கம் நடக்கிறது.மாணவர்களின் சிந்தனை மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்கான, கணித பாடம் சார்ந்த பயிலரங்கம் ஒரு வாரம் நடக்கிறது. துவக்க விழாவில், கணிதத்துறை தலைவர் ஏஞ்சல்ஜாய் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி துவக்கி வைத்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். இயக்குனர் மஞ்சுளா தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன், பயிலரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர் கலாவதி நன்றி தெரிவித்தார்.கணித பயிலரங்கம் 22ம்தேதி வரை நடக்கிறது. தமிழகம், கோவா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்து கருத்தாளர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ