உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அருகே மூவர் படுகொலை 850 பேர் விவரம் சேகரித்து விசாரணை

திருப்பூர் அருகே மூவர் படுகொலை 850 பேர் விவரம் சேகரித்து விசாரணை

திருப்பூர்:திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி. மகன் உள்ளிட்ட மூவர் கொடூர கொலையான வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. தமிழகம் முழுவதும் பழைய கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 850 பேரின் விபரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் சேமலைகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி 78. மனைவி அலமேலு 75. இத்தம்பதி தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்தனர். மகன் செந்தில்குமார் 46. நவ., 29 அதிகாலை தந்தை, தாய், மகன் ஆகியோர் கொடூரமாக முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இக்கொலை குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு 'சிசிடிவி' பதிவு, பழைய குற்றவாளிகள் என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறியதாவது: கொள்ளைக்காக நடந்த கொலையா அல்லது முன்விரோததுக்கா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. தற்போது வரை 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு முன் தோட்டத்தில் இருந்து நிறுத்தப்பட்ட நபரை சந்தேகத்தின்படி விசாரித்தனர்.எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. சென்னிமலை, காங்கயம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த கொலையுடன், தற்போது இக்கொலையை ஒப்பிட்டதில் ஒரே மாதிரியானவை என்பது தெரிந்தது.இம்மாவட்டத்தில் 2011 முதல் 2024 வரை பதிவான கொலை வழக்குகளின் விபரங்களை பெற்று, இதில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனரா என்று விசாரிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள குற்றபதிவேடுகளில் இருந்து 850 பேரின் விபரங்களை பெற்றும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

கொலையானவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கூறியதாவது: தோட்டத்து சாலையில் குடியிருப்பவர்களை குறி வைத்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளையடிப்பது, கொலை செய்வது நடக்கிறது. இது 3வது சம்பவம். கள்ளக்கிணற்றில் நால்வர் கொலையான விஷயத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.சென்னிமலை அருகே இதேபோல் 4 பேரை வெட்டி கொன்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இது போன்ற குற்றம் நடந்திருக்காது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.போலீஸ் சரிவர பாதுகாப்பு கொடுக்காததால், பொதுமக்கள் தங்களுடைய எண்ணங்களை தெரிவிக்க, கோரிக்கைகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.அதற்கு அனுமதி இல்லை என்று தடுக்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை