மேலும் செய்திகள்
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
21-Nov-2025
திருப்பூர்: முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் வாழ் நெல்லை, துாத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கைது செய்யாவிடில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒருநாள் கடை அடைப்பு மற்றும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். முதல்வருக்கு, வாக்காளர் அடையாள அட்டை தபாலில் அனுப்பப்படும் என, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
21-Nov-2025