குப்பை கொட்ட இதுவா இடம்?
திருப்பூர்:குப்பை கொட்டுவதற்கு இடமில்லாது மாநகராட்சி திணறி வரும் நிலையில், ரோடு ஓரங்களில், தெருக்களில் குப்பை கொட்டி வருகின்றனர் மக்கள். அதன்படி திருப்பூர் ஆஷர் மில் பஸ் ஸ்டாப் பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால் மரத்தின் அடியில் மக்க ள் குப்பை கொட்டுகின்றனர். இது மரத்தையும் மக்களையும் பாதிக்கும். மாநகராட்சி, குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு கொண்டுவர வேண்டும்; அல்லது அப்பகுதியில் குப்பைத்தொட்டியாவது அமைக்க வேண்டும்.