உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பழைய பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் கிருஷ்ணமூர்த்தி, ரவிகுமார் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி, பாலசுப்ரமணி, அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அந்தோணிராஜ், வட்டக்கிளை தலைவர் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை