வெற்றியை வசமாக்கிய ஜெய்வாபாய் பள்ளி மாணவியர்
திருப்பூர்: மாவட்ட தடகள போட்டியில், தனிநபர் பிரிவில், அசத்தலாக திறமை காட்டிய ஜெய்வாபாய் பள்ளி மாணவியர், 14 வயது மற்றும், 17 வயது பிரிவில் என மூன்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.பள்ளி கல்வித்துறை, மாவட்ட விளையாட்டு பிரிவு இணைந்து, கடந்த அக்., 28, 29ம் தேதியில் மாவட்ட தடகள போட்டியை, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் நடத்தியது. மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் இருந்து குறுமைய அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், 500 பேர் பங்கேற்றனர்.இப்போட்டியில் முதலிடம் பெற்றோர், விரைவில் நடக்கவுள்ள மாநில தடகள போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பெற்றவர்கள்
பதிநான்கு வயது பிரிவு; 100 மீ., ஓட்டம், சர்விகா (விவேகானந்தா வித்யா லயா), 17 வயது பிரிவில், பிரேமா (பிளாட்டோஸ் அகாடமி), 19 வயது பிரிவில், மித்ரா (ஸ்ரீராமகிருஷ்ணா, அம்மாபாளையம்). 200 மீ., ஓட்டம்: ஜெனிதா (ஜெய்வாபாய் பள்ளி), பிரேமா (பிளாட்டோஸ் அகாடமி), ஹர்ஷா (ஸ்ரீராமகிருஷ்ணா, அம்மாபாளையம்). 400 மீ., ஓட்டம்: ஸ்ரீ வித்யா (ஆக்ஸ்போர்டு பள்ளி, கொங்கல்நகரம்), பிரேமா (பிளாட்டோஸ் அகாடமி), கவின்திரா (எஸ்.ஆர்.கே.வி., மெட்ரிக், அம்மாபாளையம்).பதிநான்கு வயது பிரிவு - 600 மீ., ஓட்டம் லக் ஷிதா (அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலுார்), 17 வயது பிரிவு, 800 மீ., வர்ஷிகா (ஜெய்வாபாய் பள்ளி), இவ்வயது பிரிவில், 1,500 மீ., மற்றும், 3,000 மீ., ஓட்டத்தில் பிருந்தாஸ்ரீ (கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி). 19 வயது பிரிவில், 1,500 மீ., மற்றும், 3,000 மீ., ஓட்டத்தில் பவதாரணி (எஸ்.ஆர்.கே.வி., மெட்ரிக், அம்மாபாளையம்).நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் இரண்டிலும் ஷைனி (ஜெய்வாபாய் பள்ளி), 17 வயது பிரிவு, நீளம் தாண்டுதல், ரித்திகா (லுார்து மாதா கான்வெண்ட், உடுமலை), உயரம் தாண்டுதலில் பரூனிகா (லிட்ரசி மெஷின் பள்ளி, சாமளாபுரம்). 19 வயது பிரிவு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மூன்றிலும் மேனகா (ஜெய்வாபாய் பள்ளி).குண்டு எறிதல் ஷாலோமி (ராஜா இன்டர்நேஷனல் பள்ளி, பல்லடம்), 17 வயது பிரிவில், ஸ்ரீலயா (ஸ்ரீராமகிருஷ்ணா, அம்மாபாளையம்). இதே மாணவி, வட்டு எறிதலிலும் முதலிடம். ஈட்டிஎறிதலில் மாலதி (பாரதி விகாஸ் பள்ளி, திருப்பூர்), போல்வால்ட்டில் சம்ரிதி (ஸ்ரீ ஐயக்ரீவர் மெட்ரிக், அவிநாசி). 19 வயது பிரிவு குண்டு எறிதல், வட்டுஎறிதல், ஈட்டிஎறிதலில், ராகவர்த்தினி (ஜெய்வாபாய் பள்ளி), போல்வாட்டில் ஸ்ரேயா (ஜெய்வாபாய் பள்ளி).நானுாறு மீ., தொடர் ஓட்டம், 14 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி மாணவியர், 17 வயது பிரிவில், பிளாட்டோஸ் அகாடமி மாணவியர், 19 வயது பிரிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா அம்மாபாளையம் மாணவியர் முதலிடம். தடை தாண்டும் ஓட்டம்
பதிநான்கு வயது, 80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், விருக் ஷா (ஜெய்வாபாய் பள்ளி), 17 வயது பிரிவு, 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், அஷ்மிதா (சென்சுரி பவுண்டேசன் பள்ளி), 19 வயது பிரிவில், 100 மீ., தடை தாண்டும் ஓட்டம் மதுவர்ஷா (ஆக்ஸ்போர்டு மெட்ரிக், கொங்கல்நகரம்). 400 மீ., தடை தாண்டும் ஓட்டம், பவித்ரா (அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம்). ஜெய்வாபாய் அசத்தல்
பதிநான்கு வயது பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ஜெய்வாபாய் பள்ளி மாணவி சைனி, 17 வயது பிரிவில், இப்பள்ளி மாணவியர் ராகவர்த்தினி, மேனகா பெற்றனர். 19 வயது பிரிவில், பிளாட்டோஸ் அகாடமி பிரேமா ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கைப்பற்றினார்.