காசநோய் பிரிவுக்கான பணியிட நேர்காணல்
- நமது நிருபர் -அரசு மருத்துவமனைகளில், காசநோய் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகன நேர்காணல் நடந்தது.திருப்பூரில், அரசு மருத்துவமனைகளில் காசநோய் பிரிவுகளில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன், முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர், மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம் நடந்தது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா, துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) தீனதயாளன் ஆகியோர், நேர்முகத்தேர்வு நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 14 பேர், நேர்முக தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 2 லேப் டெக்னீஷியன்; மருத்துவ அலுவலர், சிகிச்சை மேற்பார்வையாளர் ஒருவர் என, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.