கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்
உடுமலை : மடத்துக்குளத்தில் பிரசித்தி பெற்ற பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா, நவ., 2ம் தேதி துவங்கி, 8ம் தேதியுடன் நிறைவடைகிறது.விழாவில், நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஆறுகால பூஜைகள், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் இந்திர விமானம், ஆட்டுகிடா, வெள்ளையானை, நீலமயில் வாகனங்களில் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.சூரசம்ஹார விழா, நவ.,7 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. அடுத்தநாள் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.