உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கதிரவன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

 கதிரவன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

திருப்பூர்: மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு துவங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஸ்ரீவர்தனி (தேசிய மற்றும் சர்வதேச தடகளப்போட்டிகளில் வென்றவர்) பங்கேற்றார். பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் சரண்யா ராஜ்குமார், முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரதம், சிலம்பம், தொடர் ஓட்டப்பந்தயம், கராத்தே, யோகா, பிரமிடு, ட்ரில், நடனம் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பல்லவன் அணி வெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்