உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்; கலெக்டர் திடீர் ஆய்வு

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்; கலெக்டர் திடீர் ஆய்வு

திருப்பூர்; கோவில் வழியில் கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் பணிகளை, கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில், ரூ.4.85 ஏக்கர் பரப்பளவில், 34.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. பஸ் நிறுத்துமிடம்; 35 கடைகள், டூவீலர் பார்க்கிங், உணவகம், பாலுாட்டும் அறை, டிக்கெட் கவுன்டர், காத்திருப்பு அறை, பதிவு அலுவலகம், அவசர சிகிச்சை மையம், குடிநீர், கழிப்பிடம், சி.சி.டி.வி., கண்காணிப்பு அறை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகளுடன், பஸ்ஸ்டாண்ட் கட்டப்படுகிறது.கோவில் வழியில் நடைபெற்றுவரும் பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிகளின் நிலை குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொங்கலுார் ஒன்றியம், உகாயனுார் ஊராட்சி, பொல்லிகாளிபாளையத்தில், 3.25 ஏக்கர் பூமிதான நிலம், திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, உதவி கமிஷனர் வினோத், மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொறுப்பு) செல்வநாயகம் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !