உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

 தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: ஊத்துக்குளி, மேற்கு தச்சம்பாளையம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை சார்பில், காவுத்தம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சரஸ்வதி தலைமை வகித்தார். 'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர் குலைக்க கூடாது. நுாறு நாள் வேலையை, 200 நாளாக உயர்த்த வேண்டும். சம்பளத்தை, 700 ரூபாயாக உயர்த்த வேண்டும்' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க ஊத்துக்குளி தாலுகா உறுப்பினர் குமரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ