உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளுக்கு இழப்பீடு மத்திய அரசுக்கு கடிதம்

ஆடுகளுக்கு இழப்பீடு மத்திய அரசுக்கு கடிதம்

திருப்பூர்: பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு இயக்க தலைவர் வேலுசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம்:தெருநாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் இறப்பதால், விவசாயிகள், கணிசமான பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர். தெரு நாய்கள் அல்லது வெறிநாய்களால் கடிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட விலங்குகளுக்கு இழப்பீடு வழங்க இருப்பதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.இருப்பினும், மாநில அரசு அறிவித்துள்ள இழப்பீடு, சந்தை மதிப்பை விட குறைவு. எனவே, மத்திய அரசும் இந்த இழப்பீட்டில் தனது பங்களிப்பை வழங்க வேண்டும். தெருநாய்களை கருத்தடை அறுவை சிகிச்சை வாயிலாக கட்டுப்படுத்தும் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு, செயல்பாடுகள், கடந்த, 20 ஆண்டாக, தொய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், மீண்டும் கால்நடைகளை தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்தி, கால்நடைகளை பாதுகாக்க மாற்று வழிகளை ஆராய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி