கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை
பொங்கலுார் : பொங்கலுார், ரங்கபா ளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் புகழேந்தி, 28. உறவினர் மகளை காதலித்துள்ளார். அவரது தந்தை அதை ஏற்கவில்லை. இதனால் அவரது காதலி அவருடன் பழகுவதை தவிர்த்து உள்ளார். காதலியை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றவர் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் காதலியின் தந்தையை கொளுத்தி விட்டார். இதில் அவர் இறந்தார். இது குறித்த வழக்கு திருமானுார் காவல் நிலையத்தில் உள்ளது. புகழேந்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.இதனால், அவர் ரங்கபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.