உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சுற்றுச்சூழல் பாதுகாப்பு: 7ல் மாரத்தான் போட்டி

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு: 7ல் மாரத்தான் போட்டி

அவிநாசி: திருமுருகன் பூண்டியில் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் எக்கோ கிரீன் மாரத்தான் போட்டி வரும் 7ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 7 கி.மீ; 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர், சிறுமியருக்கு மூன்று கி.மீ.; 8 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு 2 கி.மீ.; 8 வயதுக்கு கீழ் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஒரு கி.மீ. என நான்கு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் டி சர்ட் அறிமுக விழா, திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது. சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரன், டாக்டர் கார்த்திகை சுந்தரன் கூறும்போது, ''சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போட்டி நடக்கிறது; சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் இருந்து துவங்கி பெரியாயிபாளையம், பச்சாம்பாளையம், நரிக்குறவர் காலனி வரை மாரத்தான் போட்டி நடைபெறும் துாரம் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ