உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பக்தர்களுக்கு கருணை உபயம்; பாலுக்குள் வெண்ணெய் போல கடவுள் நமக்குள் இருக்கிறார்: காமாட்சிபுரி ஆதீனம் சொல்லும் எளிய விளக்கம்

பக்தர்களுக்கு கருணை உபயம்; பாலுக்குள் வெண்ணெய் போல கடவுள் நமக்குள் இருக்கிறார்: காமாட்சிபுரி ஆதீனம் சொல்லும் எளிய விளக்கம்

பல்லடம்; ''பாலுக்குள் இருக்கும் வெண்ணெய் போல் கடவுள் நமக்குள் உள்ளார் என, பக்தர்களுக்கு, காமாட்சிபுரி ஆதீனம் தெளிவுபடுத்தினார்.பல்லடம் அருகே சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில், அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.அப்போது அவர் பேசியதாவது:உலகை ஆட்டிப் படைத்த அசுரர்களுக்கும் கருணை அளித்தவர் கடவுள். நம்மை சுற்றி உள்ளவர்கள் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கலாம். இது காலத்தின் கட்டாயம். ஆனால், நாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அனைத்து சொந்த பந்தங்களோடு விழாவை கொண்டாடுவது தான் சிறப்பு.அன்று, நாட்டுக்காக மகாபாரத போர் நடந்தது. இன்று, சிறு இடத்துக்கும்கூட சண்டை போட்டுக் கொள்கிறோம். சிவாயநம என்றால் அபாயம் விலகும். சிவாயநம என்னும் சொல்லுக்கான மதிப்பை அளவிடவே முடியாது. எவ்வாறு, பாலுக்குள் இருக்கும் வெண்ணெயை பிரித்து பார்க்க முடியாதோ, அதுபோலத்தான், கடவுள் நமக்குள் உள்ளார். இதை, உண்மையான தெய்வ பக்தியால் மட்டுமே இதை உணர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் பக்தர்கள் நவக்கிரஹங்களுக்கு வழிபாடு செய்தனர். சிவபெருமானுக்கு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை