மேலும் செய்திகள்
கடமஞ்சேரியில் குளம் புதர்மண்டி வீண்
14-Oct-2024
உடுமலை : நிலத்தடி நீர் மட்டத்துக்கும், பாசனத்துக்கும் ஆதாரமான செங்குளத்தில், கிராமத்தின் கழிவு நீர் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டில், பள்ளபாளையம் அருகே அமைந்துள்ளது செங்குளம். ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட இக்குளத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் வழங்கப்படுகிறது.குளத்தின் நீர்த்தேக்க பரப்பு, 74.84 ஏக்கராகவும், நேரடியாக, 285 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்குளம் அமைந்துள்ளது.செங்குளத்தின் அருகில், பள்ளபாளையம் கிராமம் அமைந்துள்ளது. குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடை கிராமத்தை ஒட்டி செல்கிறது.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இக்கிராமத்திலிருந்து, வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், மேற்குப்பகுதியில் சேர்கிறது. அங்கிருந்து, ஒருங்கிணைந்து, செங்குளத்திற்கு, தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது. கிராமத்தின் திடக்கழிவுகளும், செங்குளத்தின், நீர்த்தேக்க பரப்பில் வீசப்படுகின்றன.பல ஆண்டுகளாக கழிவு நீர், குளத்தில் கலப்பதால், மழைக்காலத்திலும், அணையிலிருந்து தண்ணீர் வரும் போதும், குளத்து நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசும் நிலைக்கு தள்ளப்படுகிறது.படிப்படியாக மாசடைந்து வரும் தண்ணீரையும், குளத்தையும் மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஏழு குள பாசன திட்ட குளங்களுக்கு, குறிப்பிட்ட மாதங்களில், பல வகை அரிய பறவையினங்கள் வந்து செல்கின்றன.நீர்த்தேக்க பரப்பையொட்டி அமைந்துள்ள மரங்கள், அனைத்து நாட்களிலும் தண்ணீர் இருப்பது போன்ற காரணங்களால், பறவைகள், செங்குளத்துக்கு தவறாமல் வந்து செல்கின்றன. மாசடையும் தண்ணீரால், பறவைகளும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.வறட்சி காலத்திலும், பள்ளபாளையம் சுற்றுப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் நிலையாக இருக்க, செங்குளம் முக்கிய காரணமாகும். நீர்த்தேக்க பரப்பில் தேங்கும் கழிவுகளால், மாசு அதிகரித்து வருகிறது.பல்வேறு களைச்செடிகளும், கரையோரத்தில் வளர கழிவு நீர் முக்கிய காரணமாகியுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குளத்தில், கழிவு கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
14-Oct-2024