உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது

பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் - 11'வது திட்டத்தின் கீழ், ஊத்துக்குளியில், 75 நெட்டிலிங்கம் மரக்கன்றுகள் நடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் லட்சியத்தில், வெற்றி அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்து திட்டங்களில் இதுவரை, 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை பல இடங்களில் குறுங்காடு போல வளர்ந்து பசுமையை பரப்பி வருகின்றன. தற்போது, 11ம் திட்டம் துவங்கி மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. பருவமழை பொழியும் நிலையில், பசுமைப்பணி தொடர்கிறது. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் உள்ள மகேந்திரா வாட்டர் நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. அதில், நெட்டிலிங்கம் வகையை சேர்ந்த, 75 மரக்கன்று நடப்பட்டது. அந்நிறுவனத்தின், கூடுதல் தலைமை பொறியாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை