உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய கால்பந்து போட்டி; எஸ்.சி.வி. பள்ளி அபாரம்

தேசிய கால்பந்து போட்டி; எஸ்.சி.வி. பள்ளி அபாரம்

திருப்பூர்; தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், தமிழக அணியாக பங்கேற்ற, தி எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி அணி சாதனை படைத்தது. ஹரியானா குருசேக்ஷ்த்ராவில், 36வது தேசிய கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழக அணியாக, திருப்பூர் தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர். இந்த அணி அரையிறுதி போட்டியில் உ.பி., அணியை வென்றனர். இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் அணியுடன் மோதி, இரண்டாமிடம் பெற்று, அதற்கான கோப்பையை பெற்றனர். கோப்பை வென்று திரும்பிய மாணவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயிற்சி வழங்கிய திருப்பூர் கிங்ஸ் அகாடமி, துணை நின்ற உடற்கல்வி ஆசிரியர் சரண் ஆகியோரை, பள்ளி தாளாளர் முருகசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி தீபா, பள்ளி முதல்வர் தாரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் கூறுகையில், 'தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், அடுத்தாண்டுக்கான கால்பந்து போட்டிக்குரிய மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையுடன், தேசிய அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் வாயிலா க இலவச பயிற்சி வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை