மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் இருக்கை வசதி இல்லை
30-Jul-2025
உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள், 2015ல் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து துவங்கியது. அப்பணிகளுக்காக, 2009ல், ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் வரை, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாளும் வசதி இருந்தது. அகல ரயில்பாதை பணி நிறைவு பெற்று, ரயில்சேவை துவங்கிய பிறகும், இத்தகைய வசதிகள் மீண்டும் செயல்படுத்தப்படவில்லை. உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயமும், அது சார்ந்த பல்வேறு தொழில்களும், அதிகளவு உள்ளன. விவசாயத்துக்கு தேவையான யூரியா உட்பட பல்வேறு உரங்கள், சென்னை மற்றும் துாத்துக்குடியிலிருந்து, பெறப்பட்டு வருகிறது. மேலும், தீவன உற்பத்தி ஆலைகளுக்கு, மக்காச்சோளம், சோயா போன்ற பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தகைய மூலப்பொருட்களை பெற அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 50க்கும் மேற்பட்ட நுாற்பாலைகளும், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அதிகளவு காகித ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருள், மற்றும் உற்பத்தி பொருள், சாலை போக்குவரத்து வழியாகவே பெறப்படுகிறது. தொழில்கள் மேம்பாட்டுக்காக, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடனான முனையம் அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை விடப்பட்டும், ரயில்வே நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
30-Jul-2025