உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பொலிரோ ஜீப்

இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பொலிரோ ஜீப்

திருப்பூர்: திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேஷன்களில் பணிபுரியும் 9 இன்ஸ்பெக்டர்களுக்கு, 'பொலிரோ' ஜீப் வழங்கப்பட்டுள்ளது.சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல போலீஸ் துறை சார்பில் வழங்கப்பட்ட 'ஜீப்'பை பயன்படுத்தி வந்தனர். இதற்கு முன்பு இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த 'ஜீப்' பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல், அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது.சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய 'ஜீப்'களை மாநகரம், மாவட்ட போலீசாருக்கு வழங்கினார். அவ்வகையில், திருப்பூர் மாநகருக்கு, இரண்டு, மாவட்டத்துக்கு, ஏழு என, ஒன்பது பொலிரோ ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை