12 வழித்தடங்களில் புதிய பஸ்கள்
திருப்பூர்; கோவை மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட, 100 பஸ்களில், 12 புதிய பஸ்கள் திருப்பூர் மாவட்ட வழித்தடங்களில் விரைவில் இயக்கத்துக்கு வர உள்ளது.புதிய பஸ்கள் துவக்க விழா கோவையில், கடந்த 5ம் தேதி நடந்தது. கோவை கோட்டத்தில் இயங்கவுள்ள, 100 புதிய பஸ்களின் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.திருப்பூர் கிளை 1 மற்றும் 2க்கு இரு பஸ்கள், காங்கயம் மற்றும் பல்லடத்துக்கு தலா மூன்று, உடுமலைக்கு நான்கு என மொத்தம், 12 புதிய பஸ்கள் திருப்பூர் மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கல்லாபுரம், பெரியபட்டி, நெகமம், தளி (உடுமலை), காங்கயம், பெருமாநல்லுார், செங்கப்பள்ளி, கோட்டபாளையம், அப்பநாயக்கன்பட்டி (திருப்பூர்) உள்ளிட்ட பகுதிகளில் புதிய பஸ்கள் இயக்கம் விரைவில் துவங்கி வைக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.