உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூந்தளிர்களுக்கு புத்தாடை

பூந்தளிர்களுக்கு புத்தாடை

பெற்றோரை இழந்து, ஒற்றை பெற்றோருடன் வாழும், அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து, தீபாவளியன்று அவர்களுக்கு புத்தாடை வழங்கி மகிழ்வித்து வருகின்றனர், வெள்ளகோவில் வட்டார தன்னார்வலர்கள். வெள்ளகோவில் வட்டாரத்தை மட்டும் மையப்படுத்தி, 'பூந்தளிர்களுக்கு புத்தாடை' என்ற பெயரில், கடந்த, 9 ஆண்டுகளாக புண்ணிய காரியத்தை செய்து வருகின்றனர்.இந்தாண்டும், தீபாவளியை முன்னிட்டு, வரும், 17ம் தேதி, இந்நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய் துள்ளனர். வெள்ளகோவில், சிலம்பகவுண்டன்வலசு பகுதியில், புத்தாடை வழங்கி, வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சி, பரிசுப் போட்டி என, குழந்தைகளுக்கான திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதன்படி, 'ஒன்று முதல், 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கேற்ற புதிய ஆடைகளை கொடையாக வழங்க விரும்புவோர், தங்களிடம் வழங்கலாம்; விவரம் தேவைப்படுவோர், 94434 54691 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்கின்றனர், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி