உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புத்தாண்டு தெய்வீக இன்னிசை

 புத்தாண்டு தெய்வீக இன்னிசை

திருப்பூர்: திருப்பூரில் புத்தாண்டையொட்டி தெய்வீக இன்னிசை இன்று நடக்கிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாழும் கலை அமைப்பு சார்பில், தியானம், யோகா ஆகிய நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. இது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, புத்தாண்டு தெய்வீக இன்னிசை என்ற பெயரில் சத்சங்கம் திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் இன்று மாலை, 5:30 முதல், 8:30 மணி வரை நடக்கிறது. அதில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி யின் சீடர் சுவாமி ஸ்ரீதேஜ் மற்றும் குழுவிரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம். கூடுதல் விபரங்களுக்கு, 98431-71185, 98433-48999 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வாழும் கலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை