உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோய்த்தடுப்பு நடவடிக்கை இல்லை; கிராமங்களில் அதிருப்தி

நோய்த்தடுப்பு நடவடிக்கை இல்லை; கிராமங்களில் அதிருப்தி

உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்பகுதிகளில், கொசுப்புழு ஒழிப்புக்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை சுகாதாரம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றிய நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பான்மையான கிராமங்களில், நுாறு சதவீத நோய்தடுப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகங்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கிராமங்களில் குடியிருப்புகளின் அருகில் தண்ணீர் தேங்குவது, முறையான பராமரிப்பில்லாமல் உள்ள புதர் போன்ற இடங்களிலிருந்தும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி, தற்போது கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் எளிதில் தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கொரோனா பரவலின் போது மருந்து தெளிப்பதற்கு தெளிப்பான் கருவிகள் ஊராட்சிகளில் பெறப்பட்டது. தற்போது இக்கருவிகள் பல கிராமங்களில் பயனில்லாமல் உள்ளன. ஊராட்சிகளில் கொசுஒழிப்புக்கு புகைமருந்து அடிப்பதற்கு பொதுமக்கள் பலமுறை கேட்டாலும், நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த கருவிகளை பயன்படுத்தி, கொசுஒழிப்பு புகை மருந்து அடிப்பதை தொடர்ந்து செயல்படுத்த ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நோய்த்தடுப்பு நடவடிக்ககைளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் வாயிலாக இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை