வடக்கு குறுமைய தடகளம்; ஏ.பி.எஸ்., பள்ளி அபாரம்
திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய தடகள போட்டிகளில், ஏ.பி.எஸ்., பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில், இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இளையோர் பிரிவு, தட்டெறிதலில் வசீகரன், முதலிடம். குண்டெறிதலில், தமிழ்வேந்தன் இரண்டாமிடம் பெற்றனர். மூத்தோர் பிரிவில், 200 மீ., 400 மீ., ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதலில் விக்னேஷ்வரன், முதலிடம்; தட்டெறிதலில், குருபிரசாத், இரண்டாமிடம்; குண்டெறிதலில், மயூரிகா இரண்டாமிடம் பெற்றனர். மேலும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் பிரவின் குமார், விக்னேஸ்வரன், யோகேஷ், சஸ்வின் மற்றும் 400 மீ., தொடர் ஓட்டத்தில் பிரவின் குமார், விக்னேஸ்வரன், சபரீஷ், சஸ்வின் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். மிக மூத்தோர் பிரிவில், தட்டெறிதலில், மாணவர் கவுதம் முதலிடம்; குண்டெறிதலில் அவர் இரண்டாமிடம் பெற்றார். 3,000 மீ., ஓட்டத்தில் தரணீஷ். 400 மீ., ஓட்டத்தில் தீபக் இரண்டாமிடம் பெற்றனர். குறுமைய தடகள போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சரவணக்குமார் பாராட்டினார்.