என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நுாலகத்தில் துாய்மை பணி
உடுமலை; புங்கமுத்துார் காந்திகலா நிலையம் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தீபாலபட்டி நுாலகத்தில், துாய்மை பணியில் ஈடுபட்டனர். உடுமலை அருகே தீபாலபட்டியில், புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ், பல்வேறு சமுதாய நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று, தீபாலபட்டியிலுள்ள நுாலகத்தை சுற்றிலும் துாய்மைப்பணி மேற்கொண்டனர். துறை வாரியாக நுாலகத்தில் புத்தகங்களை அடுக்கினர். நேற்றைய பணிகளை பள்ளி ஆசிரியர் நளாயினி துவக்கி வைத்தார். 'இலக்கிய இன்பம்' என்ற தலைப்பில், பள்ளி ஆசிரியர் நந்தகுமாரன் பேசினார்.