மேலும் செய்திகள்
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
6 minutes ago
கொப்பரை உற்பத்தி பாதிப்பு: மழைக்கு பிறகு மாற்றம்
6 minutes ago
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
9 minutes ago
ரவுண்டானா தேவை
13 minutes ago
உடுமலை: மாநில அளவிலான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிக்கு, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாணவியர், 17 வயது பிரிவினருக்கான கால்பந்து போட்டி மற்றும் 14 வயது மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில், வெற்றி பெற்று, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி அணியினர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக, மாவட்ட அளவிலான போட்டியில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய குறுமையங்களில், குறுமைய அளவில், வெற்றி பெற்று முதலிடம் பெற்ற ஏழு அணிகள் பங்கேற்றன. இதில், உடுமலை குறுமையத்தை சேர்ந்த என்.வி., மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்று திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளது. வெற்றி பெற்ற அணிக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
6 minutes ago
6 minutes ago
9 minutes ago
13 minutes ago