உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெங்காய பயிரில் நோய் விவசாயிகள் சோகம்

வெங்காய பயிரில் நோய் விவசாயிகள் சோகம்

பொங்கலுார் : விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் வெங்காய பயிர்களை நோயும் தாக்கியதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.கார்த்திகை பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த சீசனில் அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிலோ, 25 ரூபாய்க்கு விலை போகிறது. இது உற்பத்தி செலவுக்கே சரியாக போய்விடுகிறது.இந்நிலையில், பல இடங்களில் வெங்காய பயிர்களை நோய் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நோய் தாக்கிய வெங்காயம் அளவில் சிறுத்து காணப்படுகிறது. இவற்றை கிலோ பத்து, பதினைந்து ரூபாய்க்கு விவசாயிகள் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு சாதகமான முடிவை அறிவித்துள்ளதால் வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல விவசாயிகளால் இருப்பு வைக்க முடியாத அளவு பொருளாதார நெருக்கடி உள்ளது. அறுவடை சமயத்தில் விலை உயர்ந்தால் ஒழிய விவசாயிகளுக்கு பயன் இல்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை