உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குழாயில் காற்று தான் வருகிறது ஊராட்சி அலுவலகம் முற்றுகை

 குழாயில் காற்று தான் வருகிறது ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பல்லடம்: பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட, லட்சுமி நகர், செந்தில் நகர் பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், குடிநீர் குழாய் பதித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறி, பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக, குடிநீர் மற்றும் ரோடு வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக ரோடு மாறிவிடுகிறது. வேலைக்குச் செல்லவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகிறது. குழாயில் இன்று வரை குடிநீருக்கு பதிலாக காற்று மட்டுமே வருகிறது. விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். குடிக்க மட்டுமன்றி, சமையலுக்கும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால், வருவாயில் பெரும்பகுதி அதற்கே செலவாகிறது. எனவே, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ