மேலும் செய்திகள்
ஸ்மைலி எக்ஸ்போ துவக்கம்
13-Sep-2025
திருப்பூர்: ஆரஞ்ச் ஸ்கை நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தீபாவளியை முன்னிட்டு லைப் ஸ்டைல் ஷாப்பிங் எக்ஸ்போவை நடத்தி வருகிறது. இந்தாண்டு தீபாவளியையொட்டி தலை தீபாவளி பேஷன் லைப் ஸ்டைல் ஷாப்பிங் திருவிழா இன்று இரவு வரை திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக கண்காட்சியை, திருப்பூர் கிட்ஸ் கிளப் சேர்மன் மோகன் கார்த்திக் துவக்கிவைத்தார். கண்காட்சியில் அனைத்து வகை பேஷன் ஆடை வகைகள், நகைகள், பேன்சி வகைகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் பார்வைக்கும், விற்பனைக்கும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஸ்டால்கள், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ''கண்காட்சி, குடும்பங்கள் கொண்டாடும் நிகழ்வாக இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது'' என்று கூறுகிறார், கண்காட்சி இயக்குனர் அனுமித்ரா. மேலும் விபரங்களுக்கு: 98401 38026.
13-Sep-2025