மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
09-Nov-2024
உடுமலை : தேசிய அளவிலான போட்டிக்கு, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகளப்போட்டி நடந்தது. இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இளமுகிலன், நீளம் தாண்டுதல், 80மீ., தடை தாண்டுதல் உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தொடர்ந்து டிச., மாதம் நடக்கும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளி தாளாளர் சின்னராஜ், பள்ளி முதல்வர் சாரதாமணி, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
09-Nov-2024