உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் தொகுதி ஒதுக்கீடு; த.மா.கா., வேண்டுகோள்

பல்லடம் தொகுதி ஒதுக்கீடு; த.மா.கா., வேண்டுகோள்

பல்லடம்; பல்லடத்தில், த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.நகரத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ராமசாமி, மாவட்டத் தலைவர்கள் ஜெகதீசன், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச் சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலில், பல்லடம் தொகுதியை த.மா.கா.,வுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, ஆமதாபாத் விமான விபத்து உயிரிழப்புகள், அவிநாசி ரிதன்யா மரணம், திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பு ஆகிய சம்பவங்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னையன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை