உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரை சேர்ந்த கட்சியினர் ஈரோடு கிழக்கில் தேர்தல் பணி

திருப்பூரை சேர்ந்த கட்சியினர் ஈரோடு கிழக்கில் தேர்தல் பணி

திருப்பூர்; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் களத்தில் குதிக்க, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் போட்டி யிடாமல் ஒதுங்கின. நாம் தமிழர் கட்சி மட்டும் வேட்பாளரை நிறுத்தி, ஓட்டு அறுவடையில் தீவிரம் காட்டியது.திருப்பூர் தி.மு.க., வினர், தேர்தல் பிரசாரத்தின் ஆரம்ப நாட்களில், தொகுதிக்கு சென்று ஓட்டு சேகரித்தனர். ஆனால், 'அத்தொகுதியில் உள்ளவர்களே தேர்தல் பணிகளை பிரித்துக் கொண்டதால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்சியினர் தேர்தல் பணிக்கு செல்லவில்லை' என, கட்சியினர் தெரிவிக்கின்றனர். கட்சி சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படாததால், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டவில்லைஅதேசமயம் திருப்பூர் பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும், ஈரோடு கிழக்கு பிரசாரத்தில் பங்கேற்றனர். 'திருப்பூரை சேர்ந்த நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை இணை செயலர் சுரேஷ்பாபு கூறுகையில், ''பிரசாரம் மேற்கொள்வதற்கு கூட, எங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.மாலையில் மட்டும் தான், பரப்புரைக்கு அனுமதிக்கின்றனர். அப்பகுதி சார்ந்த பிரச்னைகளை முன்னெடுத்தோம்; பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக உளமார பணியாற்றினோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை