மேலும் செய்திகள்
பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி புகார் மனு
20-May-2025
திருப்பூர்; திருப்பூர் வடக்கு தாலுகா, அங்கேரிபாளையம், பெரியார் நகரில், பொது இடத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறகோரிக்கை எழுந்துள்ளது. பெரியார் நகர் பகுதி மக்கள் 30 பேர் திரண்டுவந்து நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.அம்மனுவில் கூறியிருப்பதாவது:செட்டிபாளையம் கிராமம், பெரியார் நகரில் வசித்துவருகிறோம். இப்பகுதியில் உள்ள மனைப்பிரிவுகள் இடையே, பொது பயன்பாட்டுக்கான இடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்ட நபர், வருவாய்த்துறையினரின் துணையோடு, தனது பெயரை சேர்த்து, பட்டா பெற்றுள்ளார். மொத்தம் 22.15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து,பயன்படுத்திவருகிறார்.இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது, போலி ஆவணங்கள் தயார் செய்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்தது தெரியவருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் தனக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் எனவும்; இதுகுறித்து வேறு யாரும் கேள்வி கேட்கக்கூடாது எனவும் மிரட்டுகிறார்.பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யவேண்டும்; நிலத்தை ஆக்கிரமித்த நபர் மீதும் உடந்தையாக உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
20-May-2025