மேலும் செய்திகள்
ஆகஸ்டில் பழனிசாமி திருப்பூர் வருகை
28-Jul-2025
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நெருப்பெரிச்சல் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் பகுதி நிர்வாகிகள்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: இந்த மாதம் இறுதியில் பொது செயலாளர் பழனிசாமி திருப்பூர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அவர் வருகை குறித்து தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது. அவரை வரவேற்க வாக்காளர் பட்டியல் சரி பார்க்க செல்லும்போது பொதுமக்களை அழைக்க வேண்டும். ஒரு பகுதியில் இருந்து, 10 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், விஜயகுமார், முன்னாள் எம்.பி., சிவசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Jul-2025