உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாழடைந்து வரும் பூங்கா பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

பாழடைந்து வரும் பூங்கா பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு, வடக்கு உழவர் சந்தை பின்புறத்தில் மாநகராட்சி சார்பில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் உள்ள பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டி வைத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பூங்காவில் அனைத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கப்பட்ட சில நாட்கள் செயல்பாட்டில் இருந்தது. தற்போது பூட்டி போட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில், பராமரிப்பும் இல்லை. பயன்பாட்டில் இல்லாததால், பூங்கா முழுவதும் முட்புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சமூக விரோதிகள் சிலர், சுவர் ஏறி உள்ளே சென்று மது அருந்தி, பாட்டில்களை உடைத்து வருகின்றனர். இப்பகுதியில் பொழுதுபோக்கென பூங்கா மட்டுமே உள்ளது. மாலை நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்வோம். பயன்பாட்டுக்கு அளிக்குமாறு பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. பூங்காவை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !