நிலக்கடலை உற்பத்தி அதிகரிக்க திட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் பகுதிகளில் மானாவாரியாக 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.தேசிய சமையல் எண்ணெய் வித்து இயக்கம் மூலம், அவிநாசி, ஊத்துக்குளி வட்டாரங்களில், நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில், 20 எக்டருக்கும் அதிகமாக நிலக்கடலை சாகுபடி செய்யும் கிராமங்கள் தேர்வு செய்யப்படுகிறது. இரண்டு வட்டாரங்களிலும் விவசாயிகள் தொகுப்பை உருவாக்கி, 500 எக்டர் பரப்பளவில், ஒரு விவசாயிக்கு 1 எக்டர் வீதம், 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட புதிய நிலக்கடலை ரகங்கள் வழங்கப்படும்.உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கப்படும். அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களுக்கு தனித்தனியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தேர்வு செய்து, உற்பத்தியாகும் நிலக்கடலைகளை வாங்கி, மதிப்பு கூடுதலாக, எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மதிப்பு கூட்டு தொகுப்பு செயல் விளக்கத்திடல் அமைக்க, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.வட்டார அளவில் கிராமம் ஒன்றுக்கு 20 எக்டர் பரப்பளவில் அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி, நிலக்கடலை விளைச்சலை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.வட்டார அளவில் கிராமம் ஒன்றுக்கு 20 எக்டர் பரப்பளவில் அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி, நிலக்கடலை விளைச்சலை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.