மேலும் செய்திகள்
6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
25-Sep-2025
பெருமாநல்லுார்:கிராமிய மக்கள் இயக்கம் சார்பில், மழை காலத்தை முன்னிட்டு, ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் பனை விதை நடவு செய்து வருகின்றனர். பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் மற்றும் பொங்கு பாளையம் சக்தி விக்னேஸ்வரா பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இணைந்து கடந்த நான்கு நாட்களில் தொடர்ச்சியாக 18 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர். மாணவர்கள் உள்பட அமைப்பினர் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தொரவலுார் ஊராட்சி பகுதியில் உள்ள நான்கு குட்டைகளில் 9 ஆயிரம் பனை விதைகள், வள்ளிபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள நான்கு குட்டைகளில் 6 ஆயிரம் பனை விதைகள், மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் உள்ள மூன்று குட்டைகளில் 3 ஆயிரம் பனை விதைகள் என மொத்தம் 18 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர். பள்ளி தாளாளர் மயிலாவதி, முதல்வர் சக்தி வேலுச்சாமி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், உதவி ஆசிரியர் பாண்டியன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், பெருமாநல்லுார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Sep-2025