கவிதை - கட்டுரை போட்டி: மாணவியர் அபாரம்
திருப்பூர்; தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது. கவிதைப் போட்டியில், தாராபுரம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி அனீஷ் பாத்திமா முதலிடம், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜமுனா இரண்டாமிடம், திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி வர்ஷினி மூன்றாமிடம்.கட்டுரைப் போட்டியில், என்.ஆர்.கே.,புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி தங்க அர்ச்சனா முதலிடம்;, கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கலைச்செல்வி இரண்டாமிடம், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஞானதேவி மூன்றாமிடம். பேச்சுப் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளி நிரஞ்சனாதேவி முதலிடம், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாசியாநோமின் இரண்டாமிடம், ஊத்துக்குளி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆயிஷா சித்திகா மூன்றாமிடம் பெற்றனர்.முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 7 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. போட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் இளங்கோ ஒருங்கிணைப்பின் கீழ் ஆசிரியர்கள் நடத்தினர். கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் இன்று (22ம் தேதி() நடைபெறும்.--------------எல்.ஆர். ஜி., கல்லுாரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி நடந்தது.