உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

ஆண் சடலம் மீட்பு

முத்துார், நத்தக்காடையூரில் பயன்படுத்த முடியாத நிலையில் கிராம கிணறு உள்ளது. அதில், 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனீ கடித்து முதியவர் பலி

காங்கயம், நத்தக்காட்டுவலசை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர், 85; விவசாயி. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்கிருந்தோ பறந்து வந்த மலைத் தேனீ கூட்டம், சாமியப்பகவுண்டரை கடித்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை