உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை

ரயிலில் கஞ்சா  பொட்டலம் போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் : திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூர் ரயில்வே போலீசார் (போதை பொருள் தடுப்பு பிரிவு) ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். பொது பெட்டியில், ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அதனை சோதனை செய்த போது அதில் 4 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதேபோல், பீஹார் மாநிலம் பரோனியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பரோனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு பைகளில், 2.75 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்து, திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ