உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் பானை உற்பத்தி ஜோர்

பொங்கல் பானை உற்பத்தி ஜோர்

அனுப்பர்பாளையம்; திருப்பூரில் உள்ள 250 பாத்திர உற்பத்தி பட்டறைகளில் 15 முதல் 20 பட்டறைகள் பொங்கல் பானை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.நாட்டுத் தவளை, களிபானை, ஆப்பிள் பானை, டேக் ஷா, உருளி, வானா சட்டி, பானை உள்ளிட்ட பொங்கல் பானைகள் எவர் சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.ஒவ்வொரு வகை பானையிலும் அரை கிலோ முதல் ஆறு கிலோ அளவு வரை பொங்கலிடும் வகையில் பானைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. பானைகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், ''ஆர்டர் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு உற்பத்திக்கான மூல பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும்.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பித்தளை பானை ஒரு கிலோவிற்கு 70 ரூபாயும், காப்பர் பானை 130 ரூபாயும், எவர் சில்வர் பானை 30 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. முன்பு தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ஆர்டர் வர தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாகதான் ஆர்டர் வந்தது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ